பக்கம் எண் :

23  வல்லிக்கண்ணன்

  கவியாம் பெருமை வேண்டுமெனிற்
     கண்கள் முழுதும் பஞ்சாகத்
தவியாய்த் தவித்துத் தாளத்தைத்
     தத்தித் தத்திப் போட்டிட்டு
அவியாவொளி போலணைந்திட்டே
     அறியா ‘ரிதுமை’க் கும்பிட்டுச்
செவியே யில்லாக் கட்செவி போற்-
     செஞ் சொன் மேலே யூர்வீரே
 
     
 

வேறு

 
  வெண்ணெயானது நெய்யா யுருகிடுங்
கண்ணி லாதவனைக் குருடனெனலாம்
அண்ணனானவன் தம்பிக்கு மூத்தவன்
எண்ணி யாப்பி சைத்தாற் கவியாகுமே.
 
     
 

வேறு

 
  வாழ்க சீர்தளை மோனை
வாழ்க காரிகை யெதுகை
ஆழ்க வசனக் கவிதை
சூழ்க இலக்கண இருளே.
 
     
     வசன கவிதைக்கு எழுந்த எதிர்ப்புக்கு விவாத ரீதியான பதில் ஒன்று சூறாவளி
ஒன்பதாவது இதழில் (18-6-1939) இடம் பெற்றது. அதை எழுதியவர் ‘கவிதைத் தொண்டன்’.
 
     பொதுவாகவே வசனகவிதையைக் கண்டிப்பவர்களுடைய வாதம் நூதனமாக
இருக்கிறது - வசன கவிதை நூதனமோ இல்லையோ! வசன கவிதை நன்றாக இருக்கிறதா
இல்லையா என்று வாசித்துப் பார்த்து குணத்தை நிர்ணயிக்க அவர்கள் இஷ்டப்படவில்லை.
சீர், தளை, எதுகை, மோனைகளை அனுசரிக்காமல் எழுதிய கவிதை நன்றாக இருக்க
முடியாது என்பதே அவர்களுடைய கட்சிபோல் இருக்கிறது. இல்லாவிட்டால் ஒரு புதுப்
பரீக்ஷை என்பதற்காகவே அதை ஏன் கண்டிக்க வேண்டும்?

     சில பண்டிதர்கள் வசன கவிதை புதிதொன்றுமில்லை என்று சொல்லுகிறார்கள்.
பழைய நூல்களில் இருக்கிறதாம். எனவே வசன கவிதையை எதிர்ப்பவர்களை இரண்டு
பகுப்பாகப் பிரிக்கலாம். (1) பழைய முறையைப் பின்பற்றாமல் நவீனமாகப் புரட்சிப்
பாதையில் போகிறது என்ற கட்சி. (2) வசன கவிதை நவீனம் ஒன்றும் இல்லை. எல்லாம்
பழையதுதான்.ஆகையால் அதைப் புதுப் பரீக்ஷை என்று சொல்லிக் கொண்டு கூத்தாடுவது
பிசகு என்ற கட்சி.

     முன் கட்சியினருக்கு ஒரு பதிலும் சொல்லமுடியாது. ஏனென்றால் அவர்கள்
குணத்தைப்பற்றியோ கவிதையைப் பற்றியோ பேசத் தயாரில்லை. கவிதையின் அணி அலங்
காரத்தைப்பற்றித்தான் பேசத் தயார். பின் கட்சியினருக்குமட்டும் நான் ஒன்று சொல்ல
விரும்புகிறேன். ஓரிருவரால் இப்பொழுது தமிழில் கையாளப்பட்டு வரும் வசன
கவிதைமுறை புதிதுதான். நவீனம்தான். முற்காலத்தில் இருந்ததாக அவர்கள் குறிப்பிடும்
வசன கவிதைக்கும் இதற்கும்