‘ஈழகேசரி’யிலும் எழுதி வந்த படைப்பாளிகளுக்கு கலா மோகினி. கிராம ஊழியன் ஆகியவற்றோடு நெருங்கிய உறவு ஏற்பட்டது. ஈழத்தவர் படைப்புகளும் அவற்றில் வெளிவந்தன. 13-6-43ல் வெளிவந்த ‘ஈழகேசரி’யில் ‘ஓர் இரவினிலே’ என்ற நீண்ட வசன கவிதையை வரதர் எழுதியிருந்தார். ஈழத்தில் வெளிவந்த ‘முதல் புதுக்கவிதை’ இது என்று கூறலாம். |
| இருள்! இருள்! இருள்! இரவிலே நடு ஜாமத்திலே என் கால்கள் தொடும் பூமி தொடங்கி கண் பார்வைக் கெட்டாத மேகமண்டலம் வரை இருள்! இருள்! இருள்! பார்த்தேன். பேச்சு மூச்சற்று பிணம் போல் கிடந்தது பூமி இது பூமிதானா? |
இப்படித் தொடங்கி, பேய்க் காற்றையும் மின்னலையும் இடி முழக்கத்தையும் வர்ணித்து வளர்கிறது இது. இக் காலகட்டத்தில் ந. பிச்சமூர்த்தி ‘காலமோகினி’யில் ‘மழைக் கூத்து’ என்ற கவிதையை எழுதியிருந்தார். அந்தக் கவிதை வரதருக்கு இயற்கைக் கூத்துகளை விவரிக்கும் கவிதையை எழுதத் தூண்டுதலாக அமைந்திருக்கலாம். ஆயினும் இரண்டு கவிதைகளும் வேறுபட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் ஆகும். வரதர் கவிதை இயற்கைக் கூத்தை அச்சம் கலந்த அனுபவ உணர்ச்சியுடன் விவரிக்கிறது ந.பி கவிதை வியப்புணர்ச்சியுடன் அதிசயிக்கிறது. ஆரம்பகாலப் புதுக்கவிதைகள் பெரும்பாலும் வாழ்க்கை பற்றிய பலதரப்பட்ட சிந்தனைகளையும், இயற்கை பற்றிய அனுபவங்களையுமே உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன. வாழ்க்கை நிலையாமை பற்றி எழுதியவர்களுக்கு மாறாக, ‘பாரதி’ எனும் முற்போக்கு இலக்கிய சஞ்சிகையில் எழுதியவர்கள் நம்பிக்கைக் குரல் எழுப்பினார்கள். |
| நீலக் குமிழ் இடும் ஆழமான நதிகள் நலமான செல்வ மணி திரளும் கனிகள் இவற்றின் மேல் புதுயுகம் பூத்தது, அதன் சிகரம் உயர்ந்துயர்ந்தது, உழைப்பும் வியர்வையும் இனிது என்று முழக்கம் செய்கின்றது சிரஞ்சீவிக் குரல் கொண்டு. (‘ராம்’) வெட்ட வெளியாகத் தெரிந்த இடம் இன்று விண்ணை யெட்டும் சொர்ண பூமியாகத்தெரிகிறது. அந்தகாரத்தின் குகையிலே அதிசய தீபம் அதன் ஒளியிலே அகிலமே இன்பச்சுரங்கம் (தங்கம்) |
போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவ்வாறு வளர்ந்து வந்த புதுக்கவிதை சில ஆண்டுகளுக்குப் பிறகு சோர்வுற்றுத் தூக்க நிலை அனுபவித்தது. தோன்றி வளர்ந்த இலக்கிய சஞ்சிகைகள் மறைந்து போனதும், படைப்பாளிகளிடையே சோர்வு மனோபாவம் தலையெடுத்ததும் இதற்குக் காரணமாக |