பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 240

இன்றைய நிலைமை

     புதுக் கவிதை வரலாற்றை இவ்வளவு தூரம் கவனித்த பிறகு, இது இன்று எவ்வாறு
உள்ளது, புதுக்கவிதை உண்மையான வளர்ச்சிப் பாதையில் போகிறதா, புதுக் கவிஞர்கள்
பெரும்பாலோரின் தற்காலப் போக்கு எப்படி இருக்கிறது என்று சிந்திக்க வேண்டிய ஒரு
கட்டத்தை அடைந்திருக்கிறோம். புதுக் கவிஞர்களின் இன்றையப் போக்கும்.
புதுக்கவிதைகள் என்று எழுதப்படுகின்றவையும் இலக்கியத்துக்கு வளம்
சேர்ப்பதாகவுமில்லை; இலக்கிய ரசிகர்களுக்கு உற்சாகம் தருவனவாகவும் இல்லை
என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.

     ‘தீபம்’, ‘கணையாழி’ இதழ்களில் புதுக்கவிதை முன்பு போல் அதிகம் இடம்
பெறுவதில்லை. ஆயினும், புதுக் கவிதைகளை விரும்பிப் பிரசுரிப்பதற்கு அநேக இலக்கிய
வெளியீடுகள்-சதங்கை, பிரக்ஞை தெறிகள், விழிகள், நீலக்குயில் முதலியன உள்ளன.

     ‘கசடதபற’ மீண்டும் வெளிவருகிறது. மற்றும் உற்சாகமுள்ள இளைஞர்கள்
குழுகுழுவாகச் சேர்ந்து கொண்டு ஏதாவது ஒரு பெயரில், சோதனை ரீதியில், வெளியீடுகள்
தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இவற்றில் எல்லாம் புதுக்கவிதை என்ற பெயரில்
யார் யாரோ, என்னென்னவோ எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

     இவைகளை எல்லாம் பொறுமையுடன் படித்துப் பார்க்கிற இலக்கியப் பிரியர்களுக்கு
ஒன்று தெளிவாக எளிதில் விளங்கி விடுகிறது. இன்று கவிதை எழுதக்
கிளம்பியுள்ளவர்களில் பெரும் பாலருக்கு கருத்துப்பஞ்சம் கற்பனை வறட்சி மிகுதியாக
இருக்கின்றன. கவிதை உணர்ச்சி இல்லை. சொல்லப்படுகின்ற விஷயங்களில் புதுமையும்
இல்லை, உணர்ச்சியும் இல்லை.

     இவ் இலக்கிய வெளியீடுகளை எல்லாம் தொடர்ந்து படிப்பதோடு, அயல்நாட்டு
இலக்கியங்களை ஆங்கில மூலம் அறிந்து கொள்கிற பழக்கம் பெற்ற ரசிக நண்பர்கள் சிலர்
அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். தமிழில் கவிதை எழுதுகிறவர்கள் திரும்பத் திரும்பச் சில
விஷயங்களையே தொட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலிர்ப்பூட்டும் விதத்தில் நுட்பமான
உண்மைகள் நுண் உணர்வுகள், கிளர்வுதரும் புதுமைகள். மென்மையான வாழ்க்கை
அனுபவங்கள் முதலியவற்றை - அயல்நாட்டுக் கவிதைகளில் ரசிக்கக் கிடைக்கிற இனிய,
அருமையான பலரக விஷயங்களை - இவர்கள் தொடுவதுகூட இல்லையே; ஏன் என்று
கேட்கிறார்கள்.

     தமிழில் - கவிதை மட்டுமல்ல, சிறுகதைகளும் கூட - எழுதமுற்படுகிறவர்களுக்கு
இலக்கிவளமும் இல்லை. வாழ்க்கை அனுபவமும் போதாது. பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி
தேவையே இல்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள். இது வளர்ச்சிக்கு வகை செய்யாத
எண்ணம் ஆகும். புதுமை இலக்கியத்திலும் தங்களுக்கு