பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 244

     புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘சுவடு’ நல்ல கவிதைகளை பிரசுரித்தது. தரமான
இலக்கிய ஏடாக விளங்கிய ‘சுவடு’ நீண்ட காலம் வாழவில்லை.

     ‘வானம்பாடி’ கவிஞர் சிற்பியின் பொறுப்பில் திரும்பவும் தோன்றி வளர்கிறது.
பாராட்டத் தகுந்த படைப்புகளையும் புத்தக மதிப்புரையையும் பிரசுரித்து வருகிறது.
ஆயினும், புத்துயிர் பெற்ற ‘வானம்பாடி’ அதன் ஆரம்பகாலக் கவனிப்பையும் பரபரப்பான
வரவேற்பையும் பெறவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

     கவிதைத் தொகுப்புகள் மிகுதியாக வெளிவந்த போதிலும், அவை பற்றிய
விமர்சனங்கள் ஒரு சில கூட வரவில்லை என்பது பெரிய குறைபாடேயாகும்.

     ஆயினும், குறிப்பிடத் தகுந்த இரண்டு புத்தகங்கள் வந்துள்ளன.

     ஒன்று: தமிழவன் எழுதிய ‘புதுக் கவிதை - நாலு கட்டுரைகள்’ (முதல் பதிப்பு 1977)
1. ஆதி நிலைகளைத் திரும்பிப் பார்க்கும் இன்றைய கவிஞன் 2. மொழி
உருவாக்கத்துக்குரிய மொழி அழிவு ஏற்படாமையும் சமுதாய பிரக்ஞைக் கவிஞர்களும்
3. உடைபடும் புதுப் பிராந்தியங்கள் 4. வாழ்தலில் உள்ள துக்கமும், விமர்சன யதார்த்த
வெளியீடும் ஆகிய கட்டுரைகளில் தமிழவனின் விசாலப் பார்வையையும் ஆழ்ந்த
சிந்தனைகளையும் காணலாம். பலரது கவிதைகளையும் ஆராய்ந்து, உருப்படியான -
பயன்படக் கூடிய - கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார் தமிழவன்.

     “இலக்கியம் கெட முதலாளிகளின் பத்திரிக்கைகள், தீவிர சிந்தனையற்ற சூழல்
போன்றன காரணங்கள் என்கிறது நன்றாகத் தெரிகிறது. முதலாளிகளின் பத்திரிக்கைகள்
போன்ற means of communications வெறும் வர்ணங்களின் சாகசத்தில் மனம் பதியும்
பிரமையை ஏற்படுத்தியுள்ளன. இப்படியாக, போலிப் பிரமைகளில் கண்கெட்டு கிடக்கிறான்
தமிழன். இந்தப் புறப் பிரமைகளோடு கலந்தே உருவாக்கப் பெறும் அகப்பிரமைகளும்
ஏற்பட்டுள்ளன. இந்திய, தமிழக அரசியலும் இம்மாதிரி போலிப் பிரமையை ஏற்படுத்த
உதவுகிறது. பார்வைப் பிரமாணத்தைக் கொண்ட சினிமாக்களும் இப்படியே... சப்த நேசமான
வார்த்தை ஜாலத் தன்மையில் கவிதையை ஸ்தாபிக்கும் குணம், ஒரு போலிக்
கண்ணோட்டம்தான். அதனால் உள் உண்மையை தன் ரத்த ஓட்டத்தில் கலந்து, அதனை
ஆக்கிரமிக்கும் மனப் பிரதிபலிப்புக் கொண்டு ஒரு கவிஞன் உருவாகப் போவதில்லை.
புரட்சி மரபொன்றைத் தமிழ் மொழியில் சிருஷ்டிக்கும் பொறுப்புக்குத் தங்களை ஆளாக்கி
எழுதவந்த எழுத்துக் காரர்கள் மேற்கண்ட மாதிரி, வார்த்தை வளைப்புக்களில்
கவித்வசிருஷ்டி செய்யவந்தது பெரும் துரதிர்ஷ்டமே. இவர்கள் பரவிக்கிடக்கும்
போலிமையின் உள் நுழைந்து, உண்மைகளை, அதன் உறவுகளைத் தன்னோடுள்ள
சம்பந்தத்தில் உரைத்து உணர்ந்து கொள்ளவில்லை. வெறும் பகட்டுக் குணம், அர்த்த மற்ற
சொல் சாகசம், சாமர்த்தியம், தான் உணராத- வாய்பாடாக யாரோ சொல்லிக்கொடுத்த
இடது சாரி கோஷங்கள் இவற்றை கவித்வமரபாய் மாற்ற யாராலும் முடியாது. மனிதன்
பிறவற்றோடு உருவாக்கும் உறவின் அப்பட்டமான மேல்பூச்சு