| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 28 |
சில விளக்கங்கள் | | திருச்சியில் 1942 ஜுனில் தோன்றிய ‘கலாமோகினி’ (மாதம் இருமுறை) மரபுவழிக் கவிதைகளுக்கு இடம் அளித்ததோடு, வசன கவிதைக்கும் ஆதரவு காட்டியது. பிஷுவும், கு.ப.ரா. வும் அதில் தங்கள் படைப்புக்களை வெளியிட்டார்கள். பிச்சமூர்த்தியின் காற்றாடி மழைக் கூத்து ஆகிய கவிதைகள் கவனிப்பையும், பாராட்டுதல்களையும் அதிகம் பெற்றன. அதே வேளையில் எதிர்ப்பையும் கண்டனங்களையும் ஏற்றுக் கொண்டன. | மழைக்கூத்து | 1 | | பார்த்தீரோ அதிசயம். கேட்டீரோ அதிசயம், நேற்று நள்ளிரவினில் நடைபெற்ற நடிப்பினை... மந்தை மந்தையாக மேகங்கள் சரிய மலைகள் போல் இலைகள் போல மேகங்கள் விரிய, விந்தை நிமிஷத்தில் விரிந்த மேகங்கள் போய். யானையாய், மசிதோய்ந்த குட்டையாய் கடைசியில், ஊமை இருள் தேவின் சோகம் சொட்டிடுமோர் சோனையாய், தாரையாய், அமைந்த மழைக்கூத்தை. | | 2 | | காற்று முழங்கிட உயிரொலி மறைந்திட, பொங்கிப் பேசிடுமோர் சீற்றம் பிறந்திட, ஆற்றலா வேகத்தோடரக்கி வெம் கைநீட்டி, வெகுநாளாய் விளங்கிய அல்லியை வேரோடு ஆட்டி தண்ணீரில் வெள்ளியால் மின்னல்செய் அதிசயம் பார்த்தீரோ? நேற்று கேட்டீரோ? | | |
|
|