| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 32 |
வசன கவிதை, மறுமலர்ச்சி என்பதெல்லாம் அர்த்தமற்றவை என்று கூறி, அம்முயற்சிகளில் ஈடுபட்டோரைக் குறை கூறியும் கோபித்தும் பொழுது போக்கிய பண்டிதர்களை ‘கலாமோகினி’ தாக்க முன் வந்தது. காரசாரமான ஒரு கவிதை எழுதி அதன் ஆசிரியர் (சாலிவாஹனன்) வி.ரா. ராஜகோபாலன் எழுதியது இது:- | | பழமையின் பாதை, கற்ற பண்டிதர் நடை. முன்னோர்கள் வழமைஈ தெல்லாம் எங்கள் வசனமொத் ததுவே யென்று கிழமை கொண்டாடி ஏதோ கிறுக்கிவைப் பார்கள் இந்த இழவினைச் சகியாதேதும் எம்மனோர் சொன்னால் வைவார் குப்பையைக் கூட்டி வைத்துக் கொண்டிதோர் கவிதை என்பார் எப்படி யேனும் அஃதை ஏற்றமாம் கவிதை என்று ஒப்பிட வேண்டும் என்பார் உணர்ந்தவர் தவறென்றாலோ எப்படிச் சொல்வீரென்று இழிமொழி பலவும் சொல்வார். உணர்ச்சியும் சொல்லும் கூடில் உண்மையில் கவிதையாமிப் புணர்ச்சியில் லாததெல்லாம் புலவர்வாய்ச் சொல்லென்றாலும் மணமிலா மலர்தானென்போம் மானிடர் மாண்டுபோனால் பிணமெனவே நாம் சொல்வோம் பிறர்சொல்லும் வசவுக்கஞ்சோம் ஆவியே யில்லாமேனி அதனையோர் மனிதன் என்று கூவிடல் போலச் சொல்லைக் கூட்டிவைத் திதுவும் ஓர்மா காவியம் என்பார் அஃதைக் கற்றவர் பிழையென்றாலோ ‘பாவிகள் தமிழைக் கொல்லப் படைதிரண் டனரே’ என்பார். கோப்பில்லா இனிமையில்லா கொள்ளவோர் சுவையு மில்லா வேப்பிலைக் கவிதை தன்னைக் காட்டிலும் உணர்ச்சிமிக்க யாப்பில்லாக் கவிதை மட்டும் யாதினால் தாழ்ந்ததையா மூப்புடைப் பெரியீர் என்றால் | | |
|
|