பக்கம் எண் :

37  வல்லிக்கண்ணன்

மீறியதாய் ஆனால், கவித்வம் பெற்றதாக உள்ள-சிறந்த வசனங்களையே வசனகவிதை எனப் பெயரிட்டழைக்கிறோம்.

     பாரதியாரின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலியவற்றிலுள்ள பாடல்களையே
பார்த்து, ‘இவை எல்லாம் பாவா? பாவினமா? இவற்றுக்கென்ன பெயர்? எந்த
யாப்பிலக்கணத்தின்படி பாடப்பட்டவை? என்று ஒச்சம் சொல்லும் பழைய மரபினர் எவ்வித
இலக்கணமும் அமையாத இந்த வசன கவிதைக்கு இடம் கொடுப்பார்களா? அவர்கள் இதை
எதிர்க்கிறார்கள்.’

     ‘நல்லது! அந்தப் பண்டித சிகாமணிகள் வெறும் புளி மாங்காயையும்,
கருவிளங்காயையும், கருவிள நறு நிழலில் சுவைத்துக் கொண்டிருக்கட்டும்’ என்று அவர்கள்
எதிர்ப்பு அசட்டை செய்யப்பட்டு, வசன கவிதைக்குரிய ஆக்க வேலைகளும் நடந்து
கொண்டிருப்பதை இன்று நாம் காண்கிறோம்.

     இப்புதிய முயற்சியின் பயனாயெழுந்த, சுவை நிறைந்த சில வசன கவிதைகளை நாம்
பார்த்திருக்கிறோம். ஆனால் பண்டிதர்களைப் பழிப்பதையே இலக்காகக் கொண்ட சில
தண்டடி மிண்டர் செய்யும் சொற் பிரபஞ்ச அடுக்குகளை வசன கவிதை என்று ஒப்புக்
கொள்வதற்கில்லை.

     நடை சிறிது இறுக்கமாக இருப்பினும், வசனகவிதை வடிவமென்று சொல்லத்தகும் சில
பகுதிகள்- வசன கவிதையைப் பற்றிய பேச்செழுவதற்கு-முன்னரும் இருந்தன எனக்
காட்டுவது இங்கு பொருத்தமாகும்.
 
  1.ஆசையார்த் தலைக்கும் நெஞ்சத்து
அரசிளங் குமரன்,
துஞ்சிலன், பள்ளி கொள்ளாது
துள்ளியெழுந்து மெல்ல, நடந்து,
கள்ள மறியா, உள்ள நெறியால்
கவலை கதுவாத் தூய சேக்கையில்
கண்வளரும்அறைவந் துற்றான்.

2. அச்சமும் விதுப்புந் தூண்டி,
அவலமுந் துணிவு மூட்ட
அமலரும் வஞ்ச நெஞ்சன்
அறைக்கத வகற்றப் புக்கான்.

3. நள்ளிருளில், கண்வளரும்
தன்னருகே தனிவந்துற்ற
அவன் தறுகண்மை தனக்கஞ்சி
மெய் விதிர்த்து மறுகலானாள்.

4. புரைவீரப் பொய் நண்பன்.
தன்னிருள் நெஞ்ச நிறைகாம அழலுழல்வான்
முறையற்ற துறை சொல்ல,
குறையர் நிறையுடையாள் முனிவுற்றாள்.
 
இத்தொடர், உரை நடையிற் செல்வதாயினும், கவிதைப் பண்பு