நிறைந்ததாகவே காணப்படுகிறது. வசன கவிதை என்ற பெயரில் இல்லாவிடினும் அதன் உருவமிருத்தல் கண்டின் புறத்தக்கது. தமிழறிஞர் சோமசுந்தர பாரதியாரின் கட்டுரையொன்றில் இது மிளிர்கின்றது. |
| ‘சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலாவும் ஆசினியும் அசோகமும் கோங்கமும் வேங்கையும் குரவும்விரிந்து நாகமும் திலகமும்நறவமும் மாந்தியும் மரவமும் மல்லிகையும் மௌவலோடு மணங்கமழ்ந்து பாதிரியும் பராரை ஞாழலும் பைங் கொன்றையொடு பிணியவிழ்ந்து பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகை சிறந்து வண்டறைந்து தேனார்ந்து வரிக்குயில்கள் வரிபாடத் தண்டென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவண் மாணிக்கச் செய்குன்றின் மேல் விசும்பு துடைத்துப் பசும்பொன்பூத்து, வண்டு துவைப்பத் தண்டேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்.’ |
களவியலுரையாசிரியர், இதனை வெறுமனே சொல்லடுக்குச் செய்திருக்கிறார் என்று கொள்வது ஆகாது, பொருள் பொலிவும் ஓசை நயமும் செறிந்த, தமது இனிய சொற்சாதுரியத்தினாலேயே படிப்பவர் மனதைப் பரவசப்படுத்தி இயற்கையாயமைந்த ஒரு சோலையின் உருவத்தை அங்கு தீட்டி விடுகிறார் ஆசிரியர். விந்தையிதே! கட்டுரைத் தன்மை செறிந்ததாயினும் கவிதை வனப்பும் நிறைந்ததாகவே இத்தொடர் பரிமளிக்கின்றது. ஆதலின் இதுவும் வசன கவிதைக்குப் புறம்பானதன்று. |
| ‘குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்று வைகி அருவி யாடியும் சுனைகுடைந்தும் அலர்வுற்று வருவேமுன் மலை வேங்கை நறுநிழலின் வள்ளி போல்வீர் மனநடுங்க முலையிழந்து வந்து நின்றீர்; யாவிரோ வென முனியாதே மணமதுரையோ டரசுகேடுகற வல்வினைவந் துருத்த காலை கணவனையங் கிழந்து போந்த கடுவினையேன் யானென்றாள்.’ |