1 பாம்பே, படமெடுத்து நீ ஏன் இப்படி மகுடி முன் மெய் மறந்து ஆடுகிறாய்? பாம்பாட்டிக்கு பிழைப்பளிக்கவா? இல்லை, இல்லை! ஆடியாடியுன் ஆவலைத் தீர்த்துக்கொள்ள! 2 ராதே, குழலோசை கேட்டேன் நீ காதல் கொண்டு கானகமெல்லாம் ஓடுகிறாய்! கண்ணனுக்குன் கண்ணோக்கின்ப மளிக்கவா? இல்லை. இல்லை! ஓடியோடியுன் உள்ளப் பூரிப்பைக் கொட்ட! 3 பெண்ணே, புருஷனுக்கேன் இப்படிப் பணிந்து அடிமைபோல இட்டதெல்லாம் செய்கிறாய்? ‘பண்ணு’ என்று சொல்லும் புருஷனுக்கஞ்சியோ? இல்லை, இல்லை! இட்டதைச் செய்து செய்து உணர்ச்சியை அடக்க |