பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 44

  நிலைதடுமாறி நெட்டுயிர்ப்பு விட்டுவிட்டேன்;
மாததைக் கேட்டு மிரண்டுபோய் மேலாக்கிழுத்து
குடமெடுத்துக் கொண்டு கடுகியே போய்விட்டாள்!


3

கவியொருவன் கனவில் ஆழ்ந்து
கற்பனை கண்டு கருத்தை வெளியிட
செவிமூடிச் செய்யுள் செய்ய விருந்தான்;
தெரியாமல் அங்கே திட்டென்று போய்நான்
கவி அழித்தேன்; சொல் இழந்து அவன்
கடுந்துயருடன் கீழே சாய்ந்தான்!
 

     இக்காலகட்டத்தில் ந. பிச்சமூர்த்தி சிறுசிறு கவிதைகள் எழுதுவதை நிறுத்திக்
கொண்டு நீண்ட கவிதைகளும், சிறு காவியங்களும் எழுதலானார். அவை
‘கலாமோகினி’யில் வந்தன. பின்னர் ‘கிராம ஊழிய’னில் அவர் பலரகமான கவிதைகளும்
எழுதித் தனது சோதனைகளைத் தொடர்ந்தார். அவை குறித்து உரிய இடத்தில் விரிவாக
எழுதுவேன்.