பக்கம் எண் :

47  வல்லிக்கண்ணன்

  சிக்கி, நெடிதாய், குளிருருவாய்
வளர்ந்தது பாசிச பூதம்,
கண்ணீரும் துயர இருளும்
கவிந்த குகைகளில் வளர்ந்தது.
அழுகையும் அரற்றலும் அதற்கு
இன்னிசை ஆயின,
கனவும் மக்கி மடிந்தது.
கஞ்சக் குழுவினர், மிருக வெறியினர்
அஞ்சா நெஞ்சொடு கொலைத் தொழில் புரிவோர்,
பிறவிக் குறையினர், ரத்தம் செத்தவர்,
மூளை திரித்தோர், தற்கொலைப் பித்தர்,
காமவெறியர், இன்னோரன்ன
தன்னிலை தவறிய தறுதலைகளுடனே,
பருத்த தொந்தி, கதுப்புக் கன்னம்
பித்தப் பேச்சுடன் பணமும் படைத்தவர்
அதிகார வெறிபற்றி மனிதம் இழந்தோர்
பிணக் கழுகின் பெருமூக்கும் பேழ்வயிறும்
நடையில் ஓர் நடிப்பும் பிணக்களை மூஞ்சியும்
பெற்ற பேதலித்த மனசினர்,
நொண்டும் குள்ளர்கள்,
ராப்பகலாய் துயரால் துடித்து
அலறிடும் அபலையர் தம் ஓலத்தில்
மகிழ்வு காண்போர்
இவரே பாசிசப் பணியாளர்கள்!
 
     இப்படி மேலும் வளர்வது அந்தக் கவிதை.

     சென்னை நகரத்தில் ரேஸ் புத்தகங்கள் விற்பனை செய்யும் சிறுவர்கள்;
சுட்டெரிக்கும் வெயிலிலும் சோற்றுக் கூடைகளைச் சுமந்து பலப்பல ஆபீசுகளுக்கும் போய்
உரியவர்களிடம் அவற்றைச் சேர்ப்பிக்கும் கூலிக்காரிகள்; வறுமையில் வாடும் பலதர
மக்களின் உடமைகளைப் பெற்று வளமாய் வளரும் வட்டிக்கடை; யுத்தத்துக்குச் சென்று
திரும்பிய வீரர்களிடம் தன் மகனைப்பற்றி விசாரிக்கும் ஏழைத் தாயின் அன்பையும்;
அன்பனின் வருகையை எதிர்நோக்கி ஏங்கும் காதலியின் மனத்துடிப்பையும்
எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சி-இவற்றை எல்லாம் நடைச் சித்திரங்களாக எழுதியிருந்தார்
கே.ராமநாதன். அவற்றையும் கவிதைகளாக்க விரும்பினார். அவ்வாறே ஆக்கினேன்.

 

இந்தியா ரேஸ்!

மவுண்ட்ரோடு மூலை
கோட்டையின் பக்கம்
பஸ் ஸ்டாண்ட் ஓரங்கள்
அங்கெழும் கூச்சல்
“இந்தியா ரேஸ்...