| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 48 |
| புல் ரிசல்ட், வேணுமா?” மோட்டார் அலறல் டிராமின் ஓலம் ரேடியோக் கூச்சல் பற்பல நாதங்கள் குழம்பினும் என்! மேலோங்கி ஒலிக்கும் மனிதக் குரல் “இந்தியா ரேஸ் புல் ரிசல்ட், வேணுமா?” கை சைகை கண்டால் குதித்தே வருவான் ஓடும் டிராமிலே தொத்திப் பாய்வான்: டிக்கெட் டில்லாமலே டிமிக்கி கொடுப்பான்! ‘சில்லரை, சில்லரை’ என்றே ஓசிப் பயணம் ஒன்றிரண்டு செய்வான் அவன் வாய்ப் பல்லவி இந்தியா ரேஸ்! | இவ்வாறு வர்ணித்து, பந்தயப் புத்தகங்கள் விற்பனை செய்யும் பையன்களின் பரிதாப நிலைமையை விளக்குவது இந்தக் கவிதை. ஏனைய கவிதைகளும், வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் அவலத்தைச் சித்திரிப்பனவே. நான்’நவசக்தி’யில் நான்கு மாதங்கள்தான் வேலை பார்த்தேன். 1944 ஏப்ரலில், திருச்சி ஜில்லா துறையூரில் வளர்ந்து கொண்டிருந்த ‘கிராம ஊழியன்’ சேவைக்காகப் போய்விட்டேன். அதன் பிறகு, கே.ராமநாதன், 1944 மே மாதம் ‘புத்த பக்தி முதலிய வசன கவிதை’களைத் தொகுத்து சிறு புத்தகமாக வெளியிட்டார். தமிழில் வெளிவந்த முதல் வசனகவிதைப் புத்தகம் இதுவே ஆகும். ஏழுவசன கவிதைகள் கொண்டது. 31 பக்கங்கள். | | |
|
|