முதற் பதிப்புரை | | தனது இந்த நீண்ட நூலுக்கு மிகச் சுருக்கமானதாக நண்பர் வல்லிக் கண்ணன் எழுதி இருக்கும் ஆசிரிய முன்னுரையிலிருந்து பின்வரும் ஒரு பாராவை இங்கு எடுத்துக்காட்டிவிட்டு என் அறிமுக வார்த்தைகளை தொடருகிறேன். | ‘இது புதுக்கவிதை வரலாறுதான், புதுக்கவிதைகள், கவிஞர்கள் பற்றிய விமர்சனமோ ஆய்வுரையோ அல்ல. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வருஷ ரீதியில் தொகுத்து எழுதப்பட்டுள்ளன இதில். போகிற போக்கில் அங்கங்கே சிற்சில இடங்களில் எனது அபிப்ராயங்களையும் மேலோட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.’ | இதோடு, முன்னுரையின் முதல்பாரா இரண்டு வரிகளையும் கடைசி பாராவின் முதல்வாக்கியத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது ஆசிரியரின் வரையறுத்துக் கொண்ட உத்தேசம் நமக்கு தெளிவாகிறது. இந்த நூலில் நாம் எதிர்பார்க்க வேண்டியதையும் உணர்த்துவதாக இருக்கிறது. | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற இந்தபுத்தகம் தமிழ் இலக்கியத் துறையில் ஒரு தலைசிறந்த முயற்சி. அதுமட்டுமல்ல, இது புதுவிதமானதும் கூட, சங்ககாலக் கவிதைகள், காவ்யகால கவிதைகள், பக்தி காலக்கவிதைகள், சிற்றிலக்கிய கவிதைகள் ஆகியவற்றின் தோற்றமும் வளர்ச்சியும் என்று வரலாற்று ரீதியாக நமக்கு புத்தகங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதுக்கு நியாயமான காரணங்கள் கூட சொல்லலாம். அந்த இலக்கியங்கள் நமது சமீப காலத்தியவை இல்லை. வெகு புராதனமானவை. பராபரியாக கேள்விப்பட்டு தெரியவந்த தகவல்களுக்கு மேலேயோ அல்லது அந்த இலக்கிய படைப்புகளுக்குள்ளிருந்து தெரியவந்த தகவல்களுக்கு மேலேயோ வரலாற்று ரீதியாக இலக்கிய நடப்புக் குறிப்புகள் எதுவும் குறித்துவைக்கும் பிரக்ஞை இல்லாத நிலையில், நூற்றாண்டு என்ற அளவுக்குத்தான் எந்த இலக்கியப் படைப்புக்கும் இடம் காலம் நிர்ணயிக்க சாத்யமாகி இருக்கிற நிலையில், ஏதோயூகத்தில் அல்லது சரித்திரத் தகவல் ஆதாரத்தில் முன்னேபின்னே வைத்து அநுமானித்து அந்த நூற்றாண்டு இந்த நூற்றாண்டு, இந்தப் பத்தாண்டுக் காலம், இந்த ஆண்டு என்று எதுவும் கணிக்கமுடியாத நிலைதான். எனவே நமது இலக்கிய கால கட்டங்கள் ‘பொத்தம் பொதுவாக’வும் குத்து மதிப்பாகவும் ஒரு மிக நீண்ட கால அளவுக்குள், எல்லைக்குள் அடக்கப்பட்டு கணிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது போகட்டும், ரொம்பப் பழமையானவை என்று சொல்லிவிடலாம். சென்ற நூற்றாண்டு, இந்த நூற்றாண்டு பற்றி என்ன? இந்தக் காலத்தில் கூட தற்காலக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் | | |
|
|