| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 50 |
நாங்கள் செய்யப்போவது மாரீசம் அல்ல. பாரதி இலக்கியத்தின் புது அத்தியாயத்தை வளர்க்கப் போகிறோம். எங்கள் உள்ளத்து மூச்சை சொல்லெனும் மகுடியிலே ஒட்டி சக்தியின் லீலையைப் பரப்புவோம். பாரதி பெருமையைப் பாடுவோம். பாரதியின் பக்தர்கள் நாங்கள். எங்கள் முயற்சிக்கு நீங்கள் என்ன பெயரிட்டாலும் சரி; நாங்கள் கவலைப்படப் போவதில்லை. ஒரு எழுத்தாளன் சொன்னதைப் போல, “எமது எழுத்துக்களை கவிதை, கட்டுரை, வசன கவிதை என்று எப்பெயரிட்டு வேண்டுமானாலும் அழையுங்கள்; நாம் கையாள விரும்புவது சொற்கள்தான்; சொற்களுக்கு உயிரூட்டுவதே எமது நோக்கம்”. முதலாவதாக, ‘அழகு’ பற்றி நான் எழுதினேன்- | | உமையின் கவிதை உலகின் உயிர்ப்பு, உயிரின் சக்தி, சக்தியின் சிரிப்பு, சிவத்தின் மலர்ச்சி, மலரின் சிறப்பு, ஜீவனின் ஒளி, ஆத்மாவின் சுடர். அழகு எங்கும் நிறைந்தது. கண்ணுக்கு தெரிவது. தெரியாமல் ஒளிர்வது கலையின் கலை, காவியநயம், அழகே அனைத்தும், அது வாழ்க, வியன் வானத்திலே மோன நகை புரிகிறது அழகு, விரிகடலில் தவழ்கிறது. புரள்கிறது. குதிக்கிறது. துள்ளுகிறது அழகு, பூங்காவில் புன்னகை பூத்து ஒளிர்கிறது, பகலின் ஒளியில், இரவின் இருளில், நிலவின் கதிரில், வெள்ளியின் சிமிட்டில், மின்னலின் பாய்ச்சலில் ஆட்சிபுரிகிறது அழகு. மங்கையின் மேனியில், அவள் அங்கங்களில், கண்களில் கன்னத்தில், குமிண் சிரிப்பில் அழகு நெளிகிறது, மனிதனின் உள்ளத்தில் உறையும் அழகு, பார்வையில் பிறக்கிறது எழிலுறு காட்சியாக நரம்பில் புரளும் அழகு கைவிரல் அசைவில் மலர்கிறது கலையாக காலில் ஜதி பேசுகிறது நடனத்தில், உடலின் துவள்தலில் மின் எழில் பிரகாசிக்கிறது. இதயக் குரல் முனகும் அழகு, கவிதையில், காவியத்தில், இலக்கியத்தில் கனவாய் சிரிக்கிறது, அழகு இல்லாத இடம் எது? அழகின் சிரிப்பு பொலிவுறுத்தாதது எது? அழகு அடியற்றது, முடிவற்றது, அழகு ஆனந்தமானது, அகண்டமானது ஆழமானது, அழகை உணரலாம், ஸ்பரிசிக்க முடியாது. | | |
|
|