பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 52

  இயற்கை இரவெனும் முத்துப் போர்வையை இழுத்துப் போர்த்தது,
வெள்ளிகள் மின்னின.

பிறை அழகு புதுப்பெண்ணின் இளமுறுவல் போல் மிளிர்ந்தது.
அதன் மார்பில், மயில் கழுத்துப் பட்டுப் போல் கணமோர் வியப்புக்
காட்டும்.

வான் உடையில் அவள் கர்வமுடன் தலை நிமிர்ந்தாள்.

அருவி அவள் புகழ் பாடியது. பாடிக் கொண்டே இருக்கிறது.
‘பேதையே, இவை மாறுமா? அழகு இவற்றின் ஒளி, உயிர்.
சக்தி, அது மயங்குகிறதா, மறைகிறதா? தேய்கிறதா? பாராடா!
பார்க்கப் பார்க்க வியப்பூட்டுவது.
சக்தி காவியம் இயற்றுகிறாள். அது அழியாதது, நிலைத்திருப்பது
இனியது; மரணத்தைப் போல,
உண்மைதானோ?
ஆனாலும்...
அழகு இன்பம் தருகிறது. சாந்தி ஊட்டுகிறது. கவலையைப்
போக்குகிறது.களிதுள்ளச் செய்கிறது.
அது வாழ்க.