| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 54 |
என்று ஆரம்பிக்கும் கவிதை அது. ‘கடவுளுக்குக் கண்ணுண்டு’ என்பது அதன் பெயர். 1944 அக்டோபரில் வெளிவந்த ‘கிராம ஊழியன்’ ஆண்டு மலரில் வேளூர் வெ. கந்தசாமி பிள்ளையின் இரண்டாவது கவிதை ‘ஓடாதீர்!’ பிரசுரமாயிற்று. அது அச்சில் வருவதற்கு முன்னரே எழுத்தாளர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது. கோவையில் நடைபெற்ற ‘முதலாவது தமிழ் எழுத்தாளர் மகா நாடு’ மேடையிலும், நண்பர்கள் நடுவிலும் திருலோக சீதாராம் அதை உணர்ச்சிகரமாகப் பாடி ஒலி பரப்பியதே காரணமாகும். வேகமும், உணர்ச்சியும், கருத்தாழமும் கொண்ட ‘ஓடாதீர்’ புதுமையானது; புரட்சிகரமானதும்கூட. | | I ஓகோ, உலகத்தீர், ஓடாதீர், சாகா வரம் பெற்ற, சரஸ்வதியார் அருள் பெற்ற, வன்னக் கவிராயன் நானல்ல; II உன்னிப்பாய் கேளுங்கள்; ஓடாதீர்; வானக் கனவுகளை வக்கணையாச் சொல்லும் உண்மைக் கவிராயன் நானல்ல III சத்தியமாய்ச் சொல்லுகிறேன் சரஸ்வதியார் நாவினிலே வந்து நடம் புரியும் வளமை கிடையாது. IV உம்மைப் போல் நானும் ஒருவன் காண்; உம்மைப் போல் நானும் ஊக்கம் குறையாமல் பொய்கள் புனைந்திடுவேன் புளுகுகளைக் கொண்டும்மை கட்டி வைத்துக் காசை- ஏமாந்தால், கறந்திடுவேன். | | |
|
|