| ஸ்பர்சமே தெய்வத் தீண்டல். பார்வையே ஒளியின் அலை. உலகின் ஒளிகளே பரத்தின் நாதம். மனமே! புலன்கள் தளையல்ல, விடுதலைக் கால்வாய். அவைகளுக்கு சக்தி தந்தவன் ஈசன்- அவனை அறிய, ஆதி அழகில் மூழ்கி எழ, கிளியே! ஈசனே ஊனாய், உருவாய், மலர்ந்திருக்கிறான். புலன்களொரு ஏணி, ஏணியைத் தூற்றாதே! | (கிளிக்குஞ்சு) | வாழ்க்கை என்பதே போராட்டம்தான். அதில் சோனியாகி ஒடுங்கிப் போவதில் பயனில்லை; இன்பமுமில்லை. எதிர்த்து நின்று போராட வேண்டும். இயற்கையும் அதைத்தான் கற்றுத் தருகிறது. இந்தத் தத்துவத்தை பிக்ஷு ‘ஒளியின் அழைப்பு’ என்ற கவிதையில் விளக்குகிறார். பட்டப்பகலில் இரவைக் காட்டும் நிழல் கொண்ட பெரிய மரம். அதனடியில் ஓர் கமுகு. | | ‘ரத்தம் செத்த, சோனிக் கமுகு, சோனியாவானேன்? அதான் வாழ்க்கைப் போர்!’ | பெருமரம், கபந்தன் தேவையோடு, சிறு மரத்தைச் சுரண்டுகிறது. ஏழைக் கமுகு தன் பங்கை, ஒளி, வெளி, காற்று, நீர் அவ்வளவையும்--பறிகொடுத்து நிற்கிறது. வாழ்க்கைப் போர் அது. | | ‘கமுகு நோஞ்சலாகாமல் என்ன செய்யும்? அதற்காக விதியென்று பேசி, செங்குத்தாய் வளருமோ? தியாகம் செய்தேனென்று புண்யம் பேசுமோ? அட பிதற்றலே! விதியைப் போற்றினால் தமஸில் உழலலாம் பிறந்த இடத்தில் வளர்வேனென்றால் சாவை உண்ணலாம். ஆ! கமுகறியும் வளர்ச்சியின் மந்திரம். | சோனிக் கமுகு குறுக்கே படர்கிறது. பிறவி இருளைத் துளைத்து, சூழலின் நிழலை வெறுத்து, முகமுயர்த்தி, விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது. அமிர்தத்தை நம்பி, ஒளியை வேண்டி, பெருமரத்துடன் போட்டியிடுகிறது. அதுவே வாழ்க்கைப் போர். | | ‘முண்டி மோதும் துணிவே இன்பம். உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி’ நானும் ஒரு கமுகு, சோனிக் கமுகு! சூழவும் எவ்வளவு பெரிய, பழைய, முதிய இருட்டு! பழமை என்ற பிரமையில், அரையொளியில், பொய்களின் பிணங்கள் எப்படி உயிருடன் நடிக்கின்றன! | | |
|
|