பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 74

மழை பெய்யவில்லை. கடலில்கூட மழை அரசியைக் காணவில்லை என்ற குழப்பம்
ஏற்படுகிறது. குமுறுகின்ற அலைகளைப் பார்த்து ஒரு அலை கூறுகிறது; ‘பரிதி என்னும்
பேரரசன் காதல் வெறியோடு கன்னிகையைத் தொட்டான். எதிர் வெறியுடன் மழை அரசி
உடன்போய்விட்டாள்.’

அதைக்கேட்ட அலைகள் போர் முரசு கொட்டின. பரிதியிடம் பாய்ந்தன. அவற்றின்
போக்கு கவிதையில் அழகுற அமைந்துள்ளது.
 
அலைகளின் பச்சை உடல்
இரும்பைப் போல கருக்கலாச்சு,
நீர்ப் பாழாம் நெடுங்கடலில்
நுரைமாலை குலுங்கலாச்சு
சூல் கொண்ட யானையைப் போல
அசைந்தாடும் அலைகளெல்லாம்
வெறிக்கூத்தைத் தொடங்கிவிட்ட,
அண்டங்கள் இற்றுப்போக,
வான்முகடு விரியும்படி
அணிவகுப்பில் அலைகள்
பரிதியிடம் பாய்ந்து சென்று
பாய்ச்சிவிட்ட வெம்மொழிகள்.
 
பவளமலர் அரியணையில் பேரழகி காணாததால் ஏற்பட்ட குழப்பங்களை விவரித்து,
குதிரைகள், யானைகள், பல்லக்குகள் கடல்வாசல் கடந்ததில்லை.
 
  கற்பரசி மட்டும் எங்கள்
காவல் கடந்து விட்டாள்.
அரிசி களவான பின்னர்
உமியைப் போய் பேசுவானேன்?
திருட்டு வெளியான பின்னர்
திரை மறைவு தேவை உண்டோ?

என்றெல்லாம் அறிவித்து, ஒவ்வாத உறவென்றாலும் ‘மாமிக்கடல் மாளிகைக்கு மறுவீடு
வந்திடுவீர்’ என அழைத்தன அலைகள்,

     ஆனால் ரவி சூடாகச் சொல்லிவிட்டான்.
 
  மான்வேட்டை ஆடும்
இளவரசன் நானன்று,
பேதையரை வலைவீசி
விழியுருட்டும் வீணனன்று;
உயர்குலத்துக் கோர் அரசன்
உயிர் நோன்பில் உயிர்ப்போன்
எண்ணற்ற மண்டலங்கள்
தோன்றி நின்று மாறத்
தூண்டி வரும் பெருஞ்சோதி
தூங்காத எழில் விளக்கு