பக்கம் எண் :

75  வல்லிக்கண்ணன்

     கனப்பாரம் பெற்றுவிட்ட தனக்குக் காதலுக்கு ஏது நேரம்? மழையரசியிடம் மையல்
என்பது வெறும் கவிக்கனவுதான் என்றான். பிறகு, பூம்பாவை கொதிக்கும் கதிர் ஒன்றில்
ஒட்டிக் கொண்டு காதலுரையோடு வந்தாள்; மேகத்துடன் மலைக்குச் சென்றாளாம்.
செந்தழல் சிம்மாதனத்தில் சாம்பல் கூடக் காணமாட்டீர் என்று கூறி அனுப்பிவிட்டான்.

     கடல் அலைகள் மாரிப்பெண்ணை மலைகளிடம் அனுப்பின. மழை ராணி வேடர்
வலை சிக்கிவிட்டாள்: அவர்கள் நோன்பிலே பட்டிடுவாள் என்று கேள்விப்பட்டு, மாரி
வேடர்களைப் போய்க் கெஞ்சினாள். வேடர்களோ-
 
யானைவாய்க் கரும்பை நீங்கள்
மீட்டும் ஆடப் பார்க்கிறீர்.
எரிந்துபோன இறகு சூடி
எழிலிலேறப் பார்க்கிறீர்,
பாம்புரிக்கும் வெண்சட்டை
செடிகளிலே ஆடும்,
பொன்னுடலப் புதுப்பாம்பு
பூமியிலே மின்னும்
பாம்பைவிட்டுச் சட்டைக்காக
அழுவதுண்டோ சொல்லு!
அமுதகான மழை அரசி
அண்டத்திலே முளைப்பாள்,
அல்லி மலர்க் கால்சிலம்பு
அகிலமெங்கும் இசைக்கும்
 
என்று கூறிவிட்டனர்.

     இதைக் கேட்டு கடல் அலைகள் சீற்றம் கொண்டன. காவியத்தின் முடிவாக வரும்
இப்பகுதி படித்து ரசித்து இன்புறவேண்டிய அருமையான கவிதைப் படைப்பு ஆகும்.
 
  சினம் மிகுந்த கடல் திரைகள்
வானளவாச் சீறின
கருமை மிகுந்த விஷத்துடனே
வானைப் போய் பிடுங்கின,
காற்று ஒன்று கூவிக்கொண்டு
உலகை வளையம் வந்தது
கடற்கரை மணல்களெல்லாம்
சுழன்று சவுக்கை எடுத்தன.
செம்படவக் கொண்டல் வந்து
வானில் வலைகள் வீசிற்று
உலகை ஏற்றும் ஒளிகளெல்லாம்
மீன்களைப் போல் சிக்கின.
மண்ணும் விண்ணும் ஒன்றதாக
மழையின் தூதர் வந்தனர்.