பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 78

  கவனமின்றி, போட்டு விட்டால்
பிரளயத்தீ படமெடுப்பேன்;
இயற்கை என்னும் எங்கள் வம்சம்
எளிதென்று எண்ண வேண்டாம்,
நேசம் வேண்டாம் பகைமை வேண்டாம்,
கவனித்தால் சேவை செய்வோம்.
 
கருத்துக்காகத்தான் இக்கவிதை.

     இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன்
நல்வாழ்வுக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்.
அறிவொளியும், உணர்வின் ஓட்டமும், அழகு நயங்களும் செறிந்து, ரசனைக்கு இனிய
விருந்து ஆகும் இலக்கியப் படைப்புகள் அவை.