பக்கம் எண் :

87  வல்லிக்கண்ணன்

  நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்.
நகத்தை வெட்டியெறி-அழுக்குச் சேரும்

     இவ்வாறு புதிய நோக்கும் போக்கும் பெற்ற பசுவய்யா தொடர்ந்து கவிதை
எழுதினார். கதவைத் திற, வாழ்க்கை, மேஸ்திரிகள், என் எழுத்து என்பன ‘எழுத்து’ முதல்
வருட ஏடுகளில் வெளிவந்துள்ளன.

     கருத்தாழம் கொண்ட ‘மேஸ்திரிகள்’ என்ற கவிதை மிகுதியும் ரசிக்கத் தகுந்தது.
 
         1
பல்கலைக் கழகத்தின்
முன்னொரு தோட்டம்
தீட்டினார் மேஸ்திரி
அற்புதத் திட்டம்.

       2
திட்டம் விளைந்தது
தோட்டம் மறைந்தது
காட்சி தந்தது
மிருகக் காட்சிசாலை.

        3
தோட்டத்தில் மேஸ்திரி ஒருவரே
எண்ணத் தொலையுமே உள்ளே?

 
     ‘எழுத்து’ புதுக்கவிதை முயற்சிகளுக்குத் தந்த ஆதரவைக் கண்டு உற்சாகம் பெற்று,
மா. இளையபெருமாள். கி. கஸ்தூரி ரங்கன், சி.பழனிசாமி, சக்ரதாரி, சுப. கோ.
நாராயணசாமி ஆகியோரும் இவ்வருடத்தில் கவிதைப் படைப்பில் ஈடுபட்டார்கள். எல்லாம்
ரசிக்க வேண்டிய-பாராட்டுதலுக்கு உரிய-படைப்புகளேயாகும்.

     ‘எழுத்து’ 14-வது ஏட்டிலேதான் ஆசிரியர் ‘புதுக்கவிதை’ பற்றி பிரஸந்தாபிக்கத்
துணிந்துள்ளார்.

     ‘பழங்கவிதை புதுக்கவிதை என்று அதிகம் இப்போது பாகுபடுத்திப் பேசிக்
கொள்கிறோம். புதுக்கவிதை முயற்சிகள் என்று ஒருவகைக் கவிதைகளுக்குப் பெயர் சூட்டி,
அதற்கு இடம் தருகிறோம். தமிழ்க் கவிதையைத் தனியான ஒரு பாதையில், திருப்பி விட்ட
பாரதியின் தனித்தன்மையை ஏற்றுக் கொண்டபின், அதற்குப்பிறகு அவ்வப்போது
தோன்றும் ஆற்றல் கொண்டவர்களது சோதனைப் படைப்புகளுக்கும் ஒரு அஸ்தஸ்து, ஒரு
இடம் இருக்கிறது. ஆனால் இந்தப் புதுக்கவிதை முயற்சி எந்த அடிப்படையில் எந்த
அளவுக்கு பழங்கவிதையிலிருந்து மாறுபட்டு நிற்கிறது என்பதை எல்லாம் ஆராய்வதற்கான
அளவுக்கு புதுக்கவிதை வளம் பெருகவில்லை என்ற ஒரு நினைப்பும் இருந்து வருகிறது.’
இந்த ஏட்டில் பிச்சமூர்த்தி வசன கவிதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இன்று
புதுக்கவிதை சோதனை ஆரம்பித்து வைத்த முதல்வர் பிச்சமூர்த்தி. புதுக் கருத்துக்கள்
ஆதாரத்துடன் அழுத்தமாக ஆராய்ந்து கூறப்பட்டுள்ள கட்டுரை அது.