| உலகம் முழுவதிலும் கலகம் உறுமுதுபார் உன்பெருங் கடமைகள் பலவுண்டு விலகும்படிச் செய்யும் வெறிகொண்ட பேச்சையெல்லாம் விலக்க விழித்தெழுவாய் தமிழ்மகனே! | (தமிழா!) |
| இந்தியத் தாயின்மனம் நொந்து கிடக்கையிலே இனமுறை பேசுகின்றார்! இழிவாகும் அந்தப் பெரியவரின் அடிமை விலங்கறுத்துன் அன்பை நிலை நிறுத்து அகிலமெல்லாம். | (தமிழா!) |
| தமிழகம் வாழ்நல் தமிழ்மொழி வளர்ந்தெம்மைத் தாங்கிடும் இந்தியத்தாய் தவம்பலிக்க குமிழும் நுரையுமெனக் கூடி மனிதரெல்லாம் கொஞ்சிக் குலவிடுவோம் குவலயத்தில். | (தமிழா!) |
சாந்திதரும் கொடி |
| கற்புடைப் பெண்கட் கெல்லாம் கணவனே தெய்வ மென்பார் சொற்பொருள் அறிந்தோர்க் கெல்லாம் சொன்னசொல் தெய்வமென்பார் மற்பெரும் வீரர்க் கெல்லாம் மானமே தெய்வமாகும் நற்பெயர் நாட்டிற் காக்கும் நமக்கிந்தக் கொடியே தெய்வம். அன்னியக் கொடிக ளெல்லாம் அரசியல் ஒன்றே பேசி பொன்னியல் போக வாழ்வின் பொதுநலம் தனையேகோரும் | |