பக்கம் எண் :

தமிழன் இதயம்103

  
  இந்திய மகனே! இந்த
இணையிலாக் கொடியைக் காத்தல்
முந்தியுன் முன்னோர் தந்த
அறமெலாம் முடிப்ப தாகும்
எந்தஓர் நாட்டிற் கேனும்
எதிரியாய் எடுத்த தன்று
சந்ததம் உலகுக் கெல்லாம்
சாந்தியைத் தரவே யாகும்.
 
 
கொடி பறக்குது
 

பல்லவி

  கொடிபறக்குது கொடிபறக்குது
     கொடிபறக்குது பாரடா
கோணலற்ற கோலில் எங்கள்
     கொடிபறக்குது பாரடா.
(கொடி)


சரணங்கள்

  சிறைகடந்து துயரடைந்த
     தேச பக்தர் நட்டது
தீரவீர சூரரான
     தெய்வபக்தர் தொட்டது
முறைகடந்து துன்பம் வந்து
     மூண்டுவிட்ட போதிலும்
முன்னிருந்து பின்னிடாமல்
     காக்க வேண்டும் நாமிதை
(கொடி)