பக்கம் எண் :

104நாமக்கல் கவிஞர்

  
  வீடிழந்து நாடலைந்து
     வினையிழந்த நாளிலும்
விட்டிடாத தேசபக்தர்
     கட்டிநின்று காத்தது
மாடிழந்து கன்றிழந்து
     மனையிழக்க நேரினும்
மானமாக நாமுமிந்தக்
     கொடியைக்காக்க வேண்டுமே.
 
(கொடி)
 
உடலுழைத்துப் பொருள்கொடுத்து
     உயிரும்தந்த உத்தமர்
உண்மையான தேசபக்தர்
     ஊன்றிவைத்த கொடி இது
கடல்கொதித்த தென்னமிக்கக்
     கஷ்டம் வந்த போதிலும்
கட்டிநின்று விட்டி டாமல்
     காக்க வேண்டும் நாமிதை.
(கொடி)
 
மனமுவந்து உயிர்கொடுத்த
     மானமுள்ள வீரர்கள்
மட்டிலாத துன்பமுற்று
     நட்டுவைத்த கொடியிது
தனமிழந்து கனமிழந்து
     தாழ்ந்துபோக நேரினும்
தாயின்மனம் ஆனஇந்த
     கொடியையென்றும் தாங்குவோம்
(கொடி)