கொடி வணக்கம் |
| கொடி வணக்கமது செய்வோம்-நாட்டின் குறைகள் நீங்கியினி உய்வோம் முடி வணங்கிஅதைப் போற்றி-அதன் மூன்று நிறக்குறிகள் சாற்றி. | (கொடி) |
| புதுமையான கொடி பாரீர்-வேறு பூத லத்திலிலை தேரீர் முதுமையா யெவர்க்கும் பொதுவாம்-வாழ்வின் முறையைக் காட்டுவது இதுவாம். | (கொடி) |
| பச்சையான ஒரு தோற்றம்-நமக்குப் பக்தி வேண்டுமெனச் சாற்றும் இச்சையான பொருள் கூடப்-பக்தி இருக்க வேணுமதை நாட. | (கொடி) |
| துய்ய வெள்ளை நிறக் காட்சி-உண்மை துலங்கு மென்பதற்குச் சாட்சி மையமாக நிற்கும் மர்மம்-சத்யம் மதங்கள் யாவினுக்கும் தர்மம். | (கொடி) |
| துறவின் வர்ணமந்தக் காவி-உலகின் துக்கப் பூட்டினுக்குச் சாவி சிறையும் வீடுமதற் கொன்றே-என்னும் சேதி ஓதுவதற் கென்றே. | (கொடி) |
| நடுவில் ராட்டை யென்று பார்ப்போம்-அதில் நலிந்த பேர்க்குக் கஞ்சி வார்ப்போம் வடுவிலாத தொழில் நூற்றல்-குடிசை வாழும் ஏழைக்கென்று சாற்றல் | (கொடி) |