| பித்தராகி ஏழைகள் பேய்பிடித்த கோலமாய் புத்திகெட்டுச் சக்தியற்றுப் போனதிந்தக் கள்ளினால் | (குடி) |
| பாடுபட்ட கூலியைப் பறிக்குமிந்தக் கள்ளினை வீடு விட்டு நாடு விட்டு வெளியிலே விரட்டுவோம் | (குடி) |
| கஞ்சியின்றி மனைவிமக்கள் காத்திருக்க வீட்டிலே வஞ்சமாகக் கூலிமுற்றும் வழிபறிக்கும் கள்ளினை | (குடி) |
| மெய்தளர்ந்து மேனிகெட்டுப் போனதிந்தக் கள்ளினால் கைநடுக்கம் கால்நடுக்கம் கண்டதிந்தக் கள்ளினால் | (குடி) |
| தேசமெங்கும் தீமைகள் மலிந்ததிந்தக் கள்ளினால் நாசமுற்று நாட்டினர் நலிந்ததிந்தக் கள்ளினால் | (குடி) |
| குற்றமற்ற பேர்களும் கொலைஞராவர் கள்ளினால் கத்திகுத்துச் சண்டைவேண கள்ளினால் விளைந்ததே | (குடி) |
| குற்றமென்று யாருமே கூறுமிந்தக் கள்ளினை விற்கவிட்டுத் தீமையை விதைப்பதென்ன விந்தையே! | (குடி) |