பக்கம் எண் :

தமிழன் இதயம்11

  
  நிந்தை பிறரைப் பேசாமல்
     நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம் அதைவணங்கிடுவோம்
     வாழ்வோம் சுகமாய் வாழந்திடுவோம்.

நெஞ்சோடு இரங்கல்
 

பல்லவி
 

  ஒரு நாளைக் கொருதரம்
     ஒருநொடிப் பொழுதேனும்
உன்னைப் படைத்தவனை
     எண்ணிச் சுகித்ததுண்டோ? - மனமே!
 

சரணம்
 

  திருநாளும் தேரும் என்று தேடியலைந்த தல்லால்
சிந்தனை அலையாமல் த்யானத்தில் நிறுத்தியே (ஒரு)
 

அனுபல்லவி
 

  விடியுமுன் விழித்தனை
     வெளுக்குமுன் வீட்டை விட்டாய்
வெவ்வேறு இடத்துக்கு
     வௌவால்போல் ஓட்டமிட்டாய்
உடலும் மனமும் சோர்ந்து
     ஓய்ந்திட வீடுவந்தும்
உண்ணும் பொழுதுங்கூட
     எண்ணம் நிலைப்பதில்லை. (ஒரு)