பக்கம் எண் :

12நாமக்கல் கவிஞர்

  
  அரைக்காசுக் கானாலும்
     ஒருநாள் முழுதுங்காப்பாய்
ஆயிரம் பேரையேனும்
     அலுப்பின்றிப் போய்ப் பார்ப்பாய்
உரைப்பார் உரைகட் கெல்லாம்
     உயர்ந்திடும் செல்வனை
உன்னுள் இருப்பவனை
     எண்ணிட நேரமில்லை.
(ஒரு)
  சிலநாளைக் கதிகாரம்
     செய்யும் ஒருவர்க்கஞ்சி
செய்யச் சொல்வதை யெல்லாம்
     செய்வாய் நீ பல்லைக் கெஞ்சி
பலநாளும் ஜென்மமெல்லாம்
     பாலிக்கும் அதிகாரி
பரமனை நினைக்கவும்
     ஒருகணம் உனக்கில்லை.
(ஒரு)
   ‘நாளும் கிழமை’ யென்று
     நல்லவர் உரைத்தாலும்
 ‘நாளைக்கு ஆகட்டும்
     வேலை அதிகம்’ என்பாய்.
பாழும் பணத்தைத் தேடி
     படும்பாடு கணக்கில்லை
பகவானை எண்ணமட்டும்
     அவகாசம் உனக்கில்லை.
(ஒரு)