|  | விடிகிற வரையிலும் அடிதடி ரகளை வீதியில் மாதர்கள் ரோதனமும்
 குடிவெறி யால்வரும் கொடுமைகள் யாவையும்
 கூண்டோ டொழிந்தது இனிமேலே
 | (விட்டது) | 
          |  | எல்லா விதத்திலும் கள்ளால் வரும் பணம்
 ஏளனத்துக்கே இடமாகும்
 நல்லார் சரியெனக் கொள்ளா வரியிதில்
 நம்மர சடைந்திட்டபழி நீங்கும்
 | (விட்டது) | 
          |  | போதையைத் தந்தபின் நீதியை ஓதுதல்
 புத்தியுடைய ஓர் அரசாமோ
 பேதைக ளாக்கிப்பின் பிழை புரிந்தாயெனல்
 பேச்சுக்காகிலும் ஏச்சன்றோ
 | (விட்டது) | 
          |  | காந்தியின் அருந்தவம் சாந்தமும் பலித்தது
 காங்கிரஸ் ஆட்சியும் ஓங்கிடுமே
 போந்தது புது யுகம் தீர்ந்தது கலிபலம்
 பூமிக்கே ஒரு புதுமையிது
 | (விட்டது) | 
          |  | சக்கரவர்த்தி நாம் ராஜாஜீக்கொரு
 சன்மா னம் நாம் தந்திடுவோம்
 அக்கரையோடவர் ஆணைப்படி கள்ளில்
 ஆசை புகாவிதம் காத்திடுவோம்
 | (விட்டது) | 
          |  | பாழும் கள்ளால் பட்டதை நினைத்தால்
 பதைக்குது நெஞ்சம் கொதிக்குதடா
 வாழும் நாடினி ஏழைகளிங்கில்லை
 வானவர் வணங்கிட வாழ்ந்திடுவோம் .
 | (விட்டது) |