கேள்விகள் |
பல்லவி |
| க(த்)தர் துணியுடுத்தச் சித்தமில்லா தநீ கத்தியெடுத்தென் செய்குவாய்? | |
அனுபல்லவி
|
| பித்தரைப்போலவே மெத்தப் பிதற்றுகின்றாய் சற்று நினைத்து உய்குவாய் | (கத்) |
சரணங்கள்
|
| கள்ளுக்கடையில் உள்ளம்மயங்கின நீ கஷ்டங்கள் சகிப்பாயோ! வெல்லும் சமர்க்களத்தில் கொல்லெனமுன்னின்று வீரமும் வகிப்பாயோ! | (கத்) |
| சாதிமதக்கலகப் பேதம்விடாதநீ தைரியமடைவாயோ! ஓதும்சமர்முனையில் ஏதும்கவலையின்றி உயிரதை விடுவாயோ! | (கத்) |
| சத்தியம் பேசவும் மெத்தப்பயந்திடும்நீ சண்டையிற் செய்வதென்ன? சத்தமும் வீரனைப்போல் யுத்தமே பேசுகிறாய் சூதனுமுய்வதுண்டோ! | (கத்) |
| உஷ்ணஜலம்படவும் கஷ்டம்பெறாதவர் உடன்கட்டை ஏறுவாரோ! இஷ்டமுனக்கிருந்தால் நஷ்டமில்லா வழி இதைவிடக் கூறுகிறேன். | (கத்) |