பக்கம் எண் :

112நாமக்கல் கவிஞர்

  
கதர்த் துணி வாங்கலையோ!
 

பல்லவி

  கதர்த்துணி வாங்கலையோ அம்மா!
கதர்த்துணி வாங்கலையோ ஐயா!
(கதர்)


சரணங்கள்

 
ஏழைகள் நூற்றது எளியவர் நெய்தது
கூழும் இல்லாதவர் குறைபல தீர்ப்பது
(கதர்)
 
கன்னியர் நூற்றது களைத்தவர் நெய்தது
அன்னதானப் பலன் அணிபவர்க் களிப்பது
(கதர்)
 
கூனர்கள் நெய்தது குருடர்கள் நூற்றது
மானமாய்ப் பிழைக்க மார்க்கம் தருவது
(கதர்)
 
தாழ்ந்தவர் நூற்றது தளர்ந்தவர் நெய்தது
வாழ்ந்திடும் உங்கட்கினும் வாழ்த்துகள் சொல்வது
(கதர்)

தேசபக்தர் திருக்கூட்டம்
 
  தேசபக்தர் திருக்கூட்டம்- தேச
சேவை செய்வதெங்கள் நாட்டம்
பாச பந்தமெல்லாம் ஓடி-விடப்
பாரதப் பெருமை பாடி
(தேச)
 
பிச்சை யெடுக்க வந்ததன்று-வேறு
பிழைக்க வழியிலை யென்றன்று
இச்சை வந்து மிகத் தள்ள-தேசம்
இருக்கும் நிலைமைதனைச் சொல்ல
(தேச)