பக்கம் எண் :

114நாமக்கல் கவிஞர்

  
ஆடு ராட்டே
 

பல்லவி

  ஆடு ராட்டே சுழன் றாடுராட்டே
 
 
அனுபல்லவி
 
  சுழன்று சுழந்று சுழன் றாடுராட்டே-இனிச்
சுயராஜ்யம் வந்ததென்று ஆடுராட்டே
(ஆடு)


சரணங்கள்

  பாபம் குறையுமென்று ஆடுராட்டே-இனிப்
பயங்கள் மறையுமென்று ஆடுராட்டே
கோபங் குறையுமென்று ஆடுராட்டே-நல்ல
குணங்கள் மிகுந்ததென்று
(ஆடு)
 

மேலான ஜாதியென்று மிக்கப்பேசி-மிக
மாறான காரியங்கள் செய்து வாழும்
மாலான ஜனங்களின் வஞ்சனையெல்லாம்-இனி
மாண்டு மடியுமென்று ஆடு ராட்டே
(ஆடு)
 
ஏழைகள் கண்ணீர்சொரிய மிக்கவருத்திப்-பல
எத்துக்கள் செய்தே பிழைக்கும் மனிதரெல்லாம்
வாழமுடி யாதினிமேல் வஞ்சனையினால்-அவர்
வாழ்க்கை திருந்து மென்று
(ஆடு)
 
பட்டனத்து வீதிகளில் சுற்றியலைந்து-மிகப்
பாடுபடும் கிராமத்துப் பத்தினிப் பெண்கள்
இஷ்டமுள்ள தங்குடிசை நிழலிருந்து-நூல்
இழைத்துப் பிழைப்பரென்று
(ஆடு)