பக்கம் எண் :

116நாமக்கல் கவிஞர்

  
  அன்னியர்கள் நூல்கொடுத்து ஆடைகொடுத்து-நம்
அங்கத்தை மூடுகின்ற பங்கமொழியும்
கன்னியர்கள் நூற்கப்பல காளைகள் செய்ய-நாம்
காத்துக் கொள்வோம் மானமென்று
(ஆடு)
 
சாந்தி பெருகுமென்று ஆடுராட்டே-மனச்
சாட்சி விளங்குமென்று ஆடுராட்டே
காந்தி துலங்குமென்று ஆடுராட்டே-அந்தக்
காட்சி சுதந்தரமென்று
(ஆடு)
 
ஆங்கார முள்ளடக்கி அன்புபெருக்கி-பல
ஆசைகளைச் சற்றேனும் அடக்கி வைக்க
ஓங்கார ரூபமதன் உண்மை காட்டி-இனி
ஓயாது நீ சுழன்று
(ஆடு)

கிளியும் வழியும்
 
  ஆதிசு தந்திரத்தைக் கிளியே அடையவழிதேடு
நாதன் திருவடியைக் கிளியே நாடி ஜெயம்பாடு

இந்தப்பெரும் உலகில் கிளியே இச்சைப்படி பறக்க
சொந்தம் உனக்கிலையா கிளியே சொல்லடி வாய்திறந்து

காட்டினிலே பிறந்தாய் கிளியே காற்றெனவே பறந்தாய்
கூட்டினிலே கிடக்கக் களியே கூசலையோ உனக்கு.

தங்கமணிக்கூண்டில் கிளியே தங்கியிருந்தாலும்
அங்கு சுதந்தரத்தின் கிளியே ஆனந்தமேதுனக்கு?

சொந்தமெலாம்மறந்து கிளியே சுற்றமெல்லாம் துறந்து
இந்தப்படியிருக்க கிளியே இச்சை கொண்டாயோ நீ!

பச்சைமரக்கிளைமேல் கிளியே பாடுதல் நீயிழந்தாய்
இச்சை உயிர்மேலே கிளியே இன்னும் எதற்காக?