பக்கம் எண் :

120நாமக்கல் கவிஞர்

  
  ஆனபடி என்னுடனே அன்பமர்ந்தக் கன்னிவர
மேனியவள் ஆடையெல்லாம் வாடையொன்று வீசியது
“ஏனிதிளங் கொடியே! என்ன?” வென்று கேட்டதற்கு
“மீனுணவும் ஊனுணவும் மெத்த உண்டதத்தையரே
தேனுங்கனிகாய் என்தேசத்தில் கொஞ்சம்”என்றாள்.

சொல்லி முகஞ்சுளித்தாள் சோகமதை மாற்றி
கொல்லைச் சிறுவீட்டிற் கொண்டவளைச் சென்றிருந்த
மல்லிகை முல்லைமலர் மணமிகுந்த நன்னீரால்
அல்லிநிறத்தவளை அங்கமெலாம் நீராட்டி
மெல்லத் துவட்டிவிட்டு மெய்யழகு செய்துவைத்து

தக்க உடைகொடுத்து டாக்காவின் சல்லாவால்
மிக்க விலையுயர்ந்த மிகமெலிந்த ஆடையினால்
ஒக்க அவளைமிக ஒய்யாரம் செய்துவிட்டு
பக்கம் உடனிருத்திப் பரிந்தேவிருந்துமிட்டேன்
துக்கம்மிக ஆறியவள் துதித்தாள் மிகவும் எனை.

என்னுடைய மக்களுடன் என்வீட்டுத் தாதியரும்
இன்னும் பணியாட்கள் எல்லோரும் பக்தியுடன்
என்ன சிறுகுறையும் ஏதுமவட் கில்லாமல்
சொன்னபடி எல்லோரும் சோடசஉபசாரம்
பண்ணியந்தப் பெண்மணியைப் பார்த்துவந்தார் நேர்த்தியுடன்

அஞ்சி அடக்கமுடன் அத்தையென்று பக்தியுடன்
வஞ்சியிளங்கொடியாள் வாழ்ந்திருந்தாள் வீட்டில் என்றன்
குஞ்சுகுழந்தை யெல்லாம் கோதையவள் தன்னிடத்தில்
கொஞ்சி விளையாடிக் குலவிமகிழ்ந்திருந்தார்
நெஞ்சம் மிகக்களித்து நிம்மதியாய் நானிருந்தேன்.

இந்தவிதம் என்வீட்டில் என்னுடைய மக்களினும்
சொந்தம் மிகக்கொண்டாடிச் சொன்னபடி கேட்டுவந்து
வந்திருக்கும் நாளையிலே ஒருநாள் அருகில்வந்து
“என்றனுடை ஊரின்மேல் ஏக்கமின்று வந்ததனால்
உன்றனுடை உத்தரவில் ஓலைவிட ஆசை என்றாள்.