திருமுடி சூட்டிடுவோம் |
பல்லவி |
| திருமுடி சூட்டிடுவோம்-தெய்வத்தமிழ்மொழிக்கு | (திரு) |
| அனுபல்லவி
| |
| வருமொழிஎவருக்கும் வாரிக்கொடுத்துதவி வண்மைமிகுந்த தமிழ் உண்மை உலகறிய | (திரு) |
சரணங்கள்
|
| பெற்றவளை இகழ்ந்து மற்றவரைத் தொழுத பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை உற்ற அரசிழந்து உரிமை பெருமை குன்றி உள்ளம் வருந்தினதால் பிள்ளைகள் சீர்குலைந்தோம் | (திரு) |
| அன்னையை மீட்டும்அவள் அரியணை மீதிருத்தி அகிலம் முழுதும்அவள் மகிமை விளங்கச் செய்வோம் முன்னைப் பெருமை வந்து இன்னும் புதுமை பெற்று முத்தமிழ்ச் செல்வியவள் சித்தம் குளிர்ந்திடவே | (திரு) |
| தாயின் மனம் குளிர்ந்தால் தவம் அதுவே நமக்கு தாரணி தன்னில் நம்மை யாரினிமேல் இகழ்வார் நோயும் நொடியும் விட்டு நுண்ணறி வோடு நல்ல நூலும்கலைகளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம் | (திரு) |