| | வேந்தர்கள் வரிப்பணம் வாங்குவதும் | |
| வீரர்கள் வெற்றிகள் தாங்குவதும் |
| மாந்தர்கள் செய்யும் எத்தொழிலும் |
| மண்ணிற் சிறப்பது கைத்தொழிலால் | (கை) |
| |
| | எந்திர வேலைகள் சிறந்திடவும் | |
| ஏற்றவன் கைத்தொழில் தெரிந்தவனே |
| மந்திரத் தால்எதும் வந்திடுமோ |
| மனிதன் செய்தது எந்திரமும் | (கை) |
| |
| | வேலையில் லாதவர் திண்டாட்டம் | |
| விளைந்திடும் கலகக் கொண்டாட்டம் |
| ஆலைகள் எந்திரச் சாலைகளால் |
| அதிகப் படுவதை அறிவோமே | (கை) |
| |
| | கைத்தொழில் காத்திடும் ஒருநாடே | |
| கலகம் குறைந்துள திருநாடாம் |
| எத்தனைக் கெத்தனை எந்திரமோ |
| அத்தனைக் கத்தனை தொந்தரவே | (கை) |
| |
| | கைத்தொழில் தம்மைக் காத்திடுவோம் கலகம் பற்பல தீர்த்திடுவோம் பொய்த்தொழில் யாவும் குறைந்திடவே பூமியில் நாமே சிறந்திடுவோம் | |
| (கை) |
| |
| | ஏழை செல்வன் என்றுவரும் எல்லாப் பிணக்கும் நின்றுவிடும் வாழிய வாழிய கைத்தொழில்கள் வாழிய நித்திய சத்தியமும் | |
| (கை) |