உலக சமாதானம் |
| கைத்தொழில் தங்களை மெத்தவும் பரிவுடன் காப்பது நம்முடைக் கடனாகும் எத்தனை ஏழையின் நித்தியஜீவனாம்! எண்ணுவதே வெகு புண்ணியமாம்! | (கை) |
|
| கைத்தொழில் குறைந்தது பொய்த்தொழில் நிறைந்தது கஷ்டங்கள் யாவையும் அதனாலே எத்திசை எங்கணும் யுத்த மென்றுரைப்பதும் எதனால் என்பதை எண்ணிப்பார், | (கை) |
|
| எந்திரம் புகுந்தது தம்திறம் அழீந்தது ஏழைகள் பிழைத்திட வழியில்லை மைந்தர்கள் வேலையை எந்திரம் செய்திட மக்களின் வேலை மனத்தாபம். | (கை) |
|
| எந்திரம் குவித்திடும் அந்தமில் சரக்கினை எங்கே விற்பது என்பதற்கே சொந்தமல் லாப்பிற நாடுகள் மேற்படை தொடுப்பதும் பிடிப்பதும் நடப்பனபார். (கை) | |
|
| ஆலையும் எந்திரச் சாலையும் வந்ததில் ஆயிரம் ஆயிரம் தொழிலாளர் வேலைகள் போனவர் ஓலமிட்டலைந்திடும் வேதனை தினந்தினம் விரிவாச்சு. | (கை) |
|
| ஆலைகள் மறுத்தலும் வேலைகள் நிறுத்தமும் அங்கே அடைந்திடும் தொழிலாளர் சாலையை வளைப்பதும் சங்கடம் விளைப்பதும் சத்தியம் கைத்தொழில் குறைந்த தனால். | (கை) |