| ஆதலி னால்ஒரு போதனை கொள்வாய் அன்புரை இன்பத் தமிழ்மகனே! வேதனைகள்பல போதலை விரும்பிடில் விதியெனக் கைத்தொழில் விருத்திசெய்வாய். | (கை) |
|
| பற்பல பொருள்களை அற்புத யந்திரம் படைப்பதைத் தடுப்பது பழியெனினும் சிற்சில பொருள்களை முற்றிலும் கையால் செய்திடச் சட்டம் செய்திடுவாய். | (கை) |
|
| சோறும் துணியும் யாரும் இனிமேல் சுத்தமும் கைத்தொழில் பொருள் வாங்கக் கூறும் சட்டக் கட்டளை யின்றேல் கொடுமையும் பஞ்சமும் குறையாது. | (கை) |
|
| பஞ்சம் குறைந்திட வஞ்சம் மறைந்திட பட்டினி கிடப்பவர் இல்லாமல் அஞ்சும்படிபல ஆயிரம் ஜனங்களை ஆலையில் அடைப்பதே அளவாகும். | (கை) |
சுகாதாரம் |
| நூறென்று மனிதர்க்கு நீ தந்த வயசினில் கூறென்று பலநோய்கள் பங்கிட்டுக் கொள்ளுதையோ! ஆரெம்மைக் காப்பவர் அன்னையே உன்னையன்றி பாரெம்மைக் கடைக்கண்ணால் தேவிபராசக்தீ! நீதந்த உடல்கொண்டு நின்புகழ் துதிக்குமுன் நோய்வந்து புகுந்தெம்மை நொடிக்குள் மடிப்பதென்றால் தாய்தந்தை நீயன்றி தஞ்சம்பிறி துமுண்டோ வாய்தந்து வாவென்று வரமருள்வாய் தேவீ! | |