பக்கம் எண் :

14நாமக்கல் கவிஞர்

  
முருகன் பாட்டு

  முருகனென்ற சிறுவன்வந்து
     முணுமுணுத்த சொல்லினால்
முன்னிருந்த எண்ணம்யாவும்
     பின்னமுற்றுப் போனதே
அருகுவந்து மனமுவந்து
     அவனுரைத்த ஒன்றினால்
அடிமையென் மனத்திருந்த
     அச்சமற்றுப் போனதே

இளமையந்த முருகன் வந்து
     என்னோடொன்று சொல்லவே
என்னுளத் திருந்த பந்தம்
     ஏதுமற்றுப் போனதே
வளமையுற்று இளமைபெற்று
     வலிமிகுத்த தென்னவே
வந்ததே சுதந்திரத்தில்
     வாஞ்சையென்ற ஞானமே.

அழகனந்த முருகன் வந்தென்
     அருகிருந்த போதிலே
ஐம்புலன்க ளுக்கொடுங்கி
     அஞ்சியஞ்சி அஞ்சிநான்
பழமையென் உடற்கண்வைத்த
     பற்றுயாவும் அற்றதால்
பாரிலென்னை யாருங்கண்டு
     பணியுமாறு செய்ததே.

அன்பனந்த முருகன்வந்
     தழைத்திருத்தி என்னையே
அஞ்சல் அஞ்சல் அஞ்சலென்று
     அகங்குழைந்து சொன்னதால்