பக்கம் எண் :

16நாமக்கல் கவிஞர்

  
  ஆடும் மயிலில் வரக்கண்டேன்-சொல்ல
அழகு அதைவிட ஒன்றுண்டோ
வீடு வாசல் பொருள் எல்லாம்-துச்சம்
விட்டு மறந்த னடி நல்லாள்
 
(முரு)
 
  பச்சைக் குழந்தையவன் மேலே-என்றன்
பற்று மிகுந்த தெதனாலே?
இச்சை யாரமிகத் தழுவி-நானும்
இணங்கி யிருந்தனனின்பம் முழுகி
 


(முரு)
 
  கள்ளங் கபடமற்ற பாலன்-மேலே
காதல் கொண்ட என்னை ஞாலம்
எள்ளி ஏளனஞ் செய்தாலும் - நான்
எதற்கும் அஞ்சிலன் எக்காலும்
 
(முரு)
 
  முருகன் கந்தன் வடிவேலன்-ஞான
திருமுருகன் குமரன் சீலன்
சிறு குழந்தை யானாலும்-அவனைத்
திருமணம் புரிவன் மேலும்
 
(முரு)
 
  வேறு பெயரைச் சொன்னாலும்-சற்றும்
விரும்ப மாட்டேனெந்த நாளும்
தூறு பேசுவதை விட்டு எனக்குத்
துணைபுரி முருகனைக் கட்ட


(முரு)