கடவுளை அறிந்தவர்கள் |
பல்லவி |
| அவரே கடவுளை அறிந்தவராவர் அனைவரும் மதித்திடத் தகுந்தவராவர். | (அவ) |
சரணம் |
| துன்பப்படுவோர் துயரம் சகியார் துடிதுடித்தோடித் துணைசெயப் புகுவார் இன்பம் தமக்கென எதையும் வேண்டார் யாவரும் சுகப்படச் சேவைகள் பூண்டார். | (அவ) |
| பசியால்வாடின எவரையும் பார்த்து பட்டினி தமக்கெனப் பரிதபித்தார்த்து விசையாய் முடிந்ததை விருப்புடன் கொடுப்பார் வீண்உபசாரம் விளம்புதல் விடுப்பார். | (அவ) |
| நோயால் வருந்திடும் யாரையும் கண்டு நோன்பெனச் செய்வார் எல்லாத் தொண்டும் தாயாம் எனவே தம்சுகம் எதையும் தள்ளிவைத் தருகினில் தாமிருந் துதவும். | (அவ) |
பெரியோர் |
| மடங்கிய பயிர்க ளெல்லாம் மழைவர நிமிர்ந்து நீளும் மருண்டிடும் குழந்தை பெற்ற மாதினைக் கண்டு தேறும் | |