| ஒடுங்கிய தேகம் தக்க உணவினால் உறுதி கொள்ளும் ஒளிந்திடும் நாகம் நல்ல ஓசையால் வெளிவந் தாடும் அடங்கிஇத் தேகந் தன்னில் அவித்தையில் உருவ மாய அன்பினில் அழுந்தும் ஆன்மா அறிஞரைக் கண்ட போது முடங்கிய மயக்கம் நீங்கி முன்னைய உணர்ச்சி ஓங்க மொய்ச்சுடர்க் கொழுந்து போல முடுகிடும் மேலே யன்றோ. அருமறையும் பலகலையும் உலகுக் கீந்து அறுசமயப் பலவழியை அடக்கி யாண்டு உரிமையுடன் பிறநாட்டார் உவந்து போற்ற ஊழிதொறும் புதிதாகும் உயர்வு தாங்கும் பெருமைநமைப் பெற்றெடுத்த இந்த நாடு பெற்றதென நாமடைந்த பெரிய பேறு மருளகற்றி அருள்சுரக்கும் ஞானம் தோன்றி மனத்துறவு பூண்டவர்கள் மகிமையேயாம். | | இராமகிருஷ்ண தேவர் | | முன்னையோர் நமது நாட்டின் முனிவரர் தேடி வைத்த முழுமுதல் ஞான மெல்லாம் மூட நம்பிக்கை யென்றும், பொன்னையே தெய்வ மென்றும், போகமே வாழ்க்கை யென்றும், | | |
|
|