பக்கம் எண் :

தமிழன் இதயம்19

  
  மனிதரைக் கொன்று வீழ்த்தும்
     போரையே வீர மென்றும்,
தன்னையே பெரிதா யெண்ணித்
     தனக்குமேல் இருக்கும் வேறோர்
சக்தியின் நினைப்பே யின்றித்
     தருக்கியே பிறப்பின் மாண்பைத்
தின்னுமோர் மயக்கம் நீங்கித்
     தெளிந்திட எழுந்த ஞானத்
தீபமே ராம கிருஷ்ண
     தேவனே போற்றி போற்றி.
 
 
  மனிதரின் பாவம் போக்க
     மகிழ்ச்சியோ டுயிரைத்தந்த
மாபெரும் த்யாக மூர்த்தி
     ஏசுவின் அன்பாம் நெய்யை,
தனிவரும் துறவி யென்று
     தரணியோர் யாரும் போற்றும்
சாந்தனாம் புத்த தேவன்
     தவமெனும் தட்டில் ஊற்றி,
இனியொரு மனிதர்க் கில்லை
     இத்தனைப் பொறுமை யென்னும்
எம்பிரான் மஹமத் நீட்டும்
     சமரசக் கைகள் ஏந்த,
சினமெனும் அரக்கர் கூட்டம்
     திரியென எரியும் ஞான
தீபமே ராமகிருஷ்ண
     தேவனே போற்றி போற்றி.

பேயென்றும், மாயை என்றும்,
     பெண்களை இகழ்ந்து பேசிப்
பெருந்துற வடைந்த பேரும்
     பிழைபுரிந் தவரே யன்றோ!