| தாயென்றும் துணைவி யென்றும் தன்னுடைய நோக்கம் காக்கும் சகதர்ம சக்தி யென்றும் சாரதா தேவி தன்னை நீ யென்றும் மகிழ்ந்து கொண்ட நிர்மல வாழ்க்கை தன்னை நினைத்திடுந் தோறும் நெஞ்சம் நெக்குநெக் குருகும் ஐயா தீயென்னப் புலனைக் காய்ந்த தீரனே ஞான வாழ்வின் தீபமே ராம கிருஷ்ண தேவனே போற்றி போற்றி. ‘ஜாதியில் உயர்ந்தோம்’ என்னும் சனியனாம் அகந்தை நீங்கத் தாழ்ந்தவர் குடிசைதோறும் தலையினால் பெருக்கிவாரும் சேதியைத் தேர்ந்து அன்னார் திகைத்துனைத் தடுத்ததாலே தெரியாமல் இரவிற் சென்று தினந்தினம் அதையே செய்து ஆதியின் அருளைத் தேடும் அந்தணர்க் கரசே! ஐயா! ஆணவம் அழிந்தா லன்றி ஆண்டவன் அணுகான் என்றாய் தீதுகள் உலகில் நீங்கித் திக்கெலாம் ஒளிரும் ஞான தீபமே ராம கிருஷ்ண தேவனே போற்றி போற்றி. ‘இரும்பினாற் சதையும் நல்ல எஃகினால் நரம்பும் கொண்ட | | |
|
|