| இந்திய இளைஞர் தோன்றி உழைத்திட வேண்டும்’ என்று விரும்பினோன் மதன ரூப விவேக ஆனந்த ஞானி வேடிக்கை யாக வந்து ‘கடவுளைக் காட்டும்’ என்ன, அரும்பினாய் முறுவல் அங்கே அதன் பொருள் அறிவார் யாரே! அன்றேஉன் அடிமையாகி அது முதல் உன்னை விட்டுத் திரும்பிடான் விட்டில் போலத் திளைத்தவன் விழுந்த ஞான தீபமே ராம கிருஷ்ண தேவனே போற்றி போற்றி. | |
| காவியை உடுத் திடாமல் கமண்டலம் எடுத்திடாமல் காட்டிடை அலைந்தி டாமல் கனலிடை நலிந்தி டாமல் பூவுல கதனைச் சுத்தப் பொய்யென்றும் புகன்றி டாமல் புறத்தொரு மதத்தி னோரைப் புண்படப் பேசி டாமல் | |
| சேவைகள் செய்தாற் போதும் தெய்வத்தைத் தெரிவோம் என்று தெளிவுறக் காட்டினாய் உன் தினசரி வாழ்க்கை தன்னால் தீவினை இருட்டைப் போக்கிச் செகமெலாம் விளங்கும் ஞான தீபமே ராமகிருஷ்ண தேவனே போற்றி போற்றி. | |