| வேதங்கள் தேடுவதும் கீதங்கள் பாடுவதும் வேள்வி முயன்றதுவும் கேள்வி பயின்றதுவும் காதம் பல நடக்கும் காவடி யாத்திரையும் கற்றவர் மற்றவரும் முற்றும் விரும்புகின்ற | (சாந்தி) |
| முந்திநம் முன்னவர்கள் நொந்து தவம்புரிந்து முற்றும் அறங்களினால் பெற்ற பெரும்பயனாம் இந்திய நாட்டினுக்கே சொந்தப் பெருமை என்று எந்தெந்த நாட்டவரும் வந்து பயிற்சி பெறும் | (சாந்தி) |
காந்தியடிகளின் பெருமை |
| இந்திய நாடு சுதந்தர மெய்தநல் தந்திரம் தந்தது யார்?-சிறு கந்தை ‘பக்கீ’ ரென்று தந்தொருவன் சொன்ன காந்தி யென்னும் பெரியார். அஞ்சிக் கிடந்தநம் நெஞ்சந் துணிந்திட ஆண்மை எழுப்பினதார்?-ஒரு வஞ்ச மில்லாதவர் வாய்மையின் தூய்மையின் வாழக்கையர் காந்தியவர். ஆயுதம் இன்றியும் யாரும் வணங்கிடும் அன்பைப் பெருக்கினதார்?-சற்றும் சாயுதல் செய்திடாச் சத்தியமூர்த்தி நம் தவமுனி காந்தியவர். நாட்டினிக் காயுயிர் கேட்பினும் தந்திட நானென்று முன்வருவோர்-பலர் போட்டியிட்டே வர வீரம் புகுத்தினர் புண்ணியர் காந்தியவர். | |