பக்கம் எண் :

30நாமக்கல் கவிஞர்

  
   ‘பெற்றெடுத்த தாய்மிகவும் பழசாய்ப் போனால்
     பிறிதொருதாய்வேண்டு’மென்று பேசுவார் போல்
நற்றவத்தால் நமக்கடுத்த தலைவன் காந்தி
     நானிலத்தின் உயிர்கட்கெல்லாம் தாயாம் நண்பன்
கற்றகதை சரித்திரங்கள் காணாச் சுத்தன்
     கருணையென்ப தின்னதெனக் காட்டும் தீரன்
உற்றதுணை காந்திவழி பழசாமென்றால்
     உய்வதற்கு வேறுகதி உண்டா நெஞ்சே!

 ‘சந்திரனும் சூரியனும் பழசாய்ப் போனார்
     சலித்துவிட்டோம் தினந்தினமும் அதையேபார்த்து
விந்தையுள்ள வேறிருவர் வேண்டுமென்று
     விரும்புவதை ஒக்குமன்றோ விளம்பாய் நெஞ்சே
இந்தநிலம் இதுவரையில் அறிந்த உண்மை
     இதைவிடமேல் இல்லையென நடந்துகாட்டிச்
சந்ததமும் மாறாத அறத்தைக் காக்கும்
     சாந்தனந்தக் காந்தியை நீ சலித்த தன்மை!

 ‘நித்தம்ஒரு காற்றினையே மூச்சு வாங்கி
     நீர்நெருப்பு நிலம்வானில் புதிசுமின்றி
மெத்தவும்நாம் சலித்துவிட்டோம்’ என்பா யானால்
     மேதினியில் வேறுவழி உண்டோ நெஞ்சே!
சக்தியஞ்சேர் சாந்தவழி அதையே நித்தம்
     சாதிப்பான் காந்தியென்று சலிப்பாயானல்பத்தியத்தைப் பாதியிலே முறித்தாற்போலப்
     பாடுபட்டும் பயனடையாப் பதரே ஆவாய்.
மாறுகின்ற சிறுபொருள்கள் மயக்கத்தாலே
     மாறாத உண்மைகளை மறந்தாய்நெஞ்சே
கூறுபல மாச்சரியம் குறையநம்முள்
     குற்றமற்ற சாந்தவழி வேண்டும் என்றே