பக்கம் எண் :

தமிழன் இதயம்39

  
  கலையிழந்த மதியானோம், கண்ணிழந்தமுகமெனவே கலங்கிநின்றோம்,
     காரிழந்த பயிரெனவே சோறிழந்த வயிறெனவே சோர்ந்துவிட்டோம்,
தலையிழந்த உடலமெனத் தவிக்கின்றோம் இது உனக்குத் தருமந் தானோ,
     தஞ்சமென முன்னின்று தைரியத்தோ டுழைக்குமுன்றன் சப்தமோய
அலையழிந்த கடலேபோல் ஆட்டிழந்த பம்பரம்போல் அடங்கி வீழந்தோம்,
     ஆரினிமேல் எங்களுக்கு அன்னையென முகந்துடைத்து அறிவு சொல்வார்!
 

இருப்பாய் நீ சிறைவாசம் இருமூன்று வருஷமென
     இசைந்து கூறி
இதுபோதா துன்றனுக்கு மிகக்குறைத்தே
     னென்ற, உன்றன்
சிறப்பறியப் போதாத தேவாரென் றொருஜட்ஜு
     செப்புங் காலை,
சிரித்தமுகம் கோணாமல் சினத்த அகம்
     காட்டானாகி
“மறுப்பதுண்டு, குற்றமில்லேன், மகிதலத்தை ஆளுகின்ற
     சக்திவேறே.
மறைந்திருந்து நானடையும் கஷ்டத்தின்
     மர்மமாக
சிறப்பதென்றன் தேசமென்று தெய்வத்தின் திருவுள்ளத்
     தீர்ப்போ”, என்று
செப்பினது அழியாமல் எம்மனத்தில்
     திகழுமென்றும்.