பக்கம் எண் :

40நாமக்கல் கவிஞர்

  
  அஞ்சாத நெஞ்சம் வேண்டின்
     அசையாத ஞானம் வேண்டின்
ஆடாத கொள்கை வேண்டின்
     ஓடாத உறுதி வேண்டின்
கெஞ்சாத வாழ்க்கை வேண்டின்
     கேடிலா எண்ணம் வேண்டின்
கேளாத கலைகள் வேண்டின்
     மாளாத உழைப்பு வேண்டின்
நஞ்சான பேர்கள் யாரும்
     நடுங்குமோர் நடத்தை வேண்டின்
நாணாத செயல்கள் வேண்டின்
     கோணாத குணங்கள் வேண்டின்
செஞ்சாறுவார்த்தை வேண்டின்
     திலகனார் சரிதை தன்னில்
தெரியாத நீதி யெல்லாம்
     தெரியலாம் தெளிவா யங்கே.

கருத்ததெல்லாம் நீராமோ வெளுத்ததெல்லாம் பாலாமோ,கண்ணிற் கண்ட
     கல்லெல்லா மாணிக்கக் கல்லே யாமோ
பருத்ததெல்லாம் கரியாமோ பாய்ந்ததெல்லாம் சிங்கமாமோ பளபளப்பாய்ப்
     பளுவிருந்தால் தங்க மெனப் பகர லாமோ,
விரித்தநிலாக் கதிர்பரப்பி வெள்ளியோடு பலமீன்கள் விளங்கி னாலும்
     வெங்கதிரோன் வந்ததென விளம்ப லாமோ,
தெருத்தெருவாய் மேடையிட்டுத் திசைமுழங்கப் பலபேசித் திரிந்திட்டாலும்
     திலகர்பிரா னாவரெனச் செப்ப லாமோ!