| தேற்றிடவே முன்னின்றாய் தெளிவுடையாய் தாதாபாய் நவரோஜீயே தேவருடன் கலந்தனையோ எங்குறையை அங்கவர்க்குக் செப்பவேண்டி? இருங்கிழவி பெருந்தேவி இந்தியநாடெம்மையெல்லாம் ஈன்றதாயின் உறுங்கிழமை சுதந்தரங்கள் ஒன்றேனும் குறையாமல் வந்தாலன்றி நெருங்கியநோய் பஞ்சங்கள் ஒருபோதும் நீங்காதென்றுறுதிசொன்ன பெருங்கிழவா தாதாபாய் நவரோஜீ உன்பெருமை பெரிதேயாகும் பேசுவதால் பெறுவதில்லை பிதற்றுவதால் பெருமையில்லை பிறரைநொந்து ஏசுவதால் நேசமில்லை இழித்ததனால் களித்ததில்லை என்று சொல்லி தாசனென உழைத்திடவே வேண்டுமென்று தளராமல் உழைத்துக் காட்டி ஆசையுடன் நீயுரைத்த அம்மொழியை எக்காலும் மறவோம் ஐயா. உடலமது தளர்ந்தாலும் உன்னுறுதி தளராமல் உழைத்து நின்றாய் சடலமது மானிடராய்ப் பிறந்தவர்கள் இதைவிடவும் சாதித்தாரோ கடலுலகில் பிறந்தவர்கள் கணக்கற்றா ரென்றாலும் கருதில் நீயே அடைவரிய ஜென்மத்தின் அரும்பயனை அறிந்தவரை அடைந்தாய் ஐயா. பணமிருந்தும் பெருமையில்லை பந்துஜனமித்திரர்கள் பரந்து சூழும் கணமிருந்தும் கண்டதில்லை காடிருந்தும் வீடிருந்தும் கனதையுண்டோ | |
|
|